தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஒருநாள் விடுமுறை… மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.!!

By Soundarya on புரட்டாதி 3, 2025

Spread the love

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி பிறந்த நாள் கொண்டாடப்படுவதால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமின்றி பார்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் எட்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறை விடப்படும்.