தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன். திடீரென்று போலி வாக்காளர்களை கண்டுபிடித்தது போல எதற்கு பேச வேண்டும்? ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? ஒரே மாதத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும்.
ஓராண்டு கால அவகாசம் எடுத்து SIR பணிகளை செய்து முடித்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். எங்களைப் போல வளர்ந்து வரும் கட்சியினர் SIR ஐ எப்படி எதிர்கொள்ள முடியும். இதனால் சுமார் ஒரு கோடி பேர் தங்களுடைய வாக்குரிமையை இழப்பார்கள் என்று கூறி சீமான் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
