விக்கிரவாண்டி அருகே நேற்று அதிகாலையில் ஏற்பட்ட ஆம்னி பேருந்து விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. பைக் ரைடர் ஒருவர் எடுத்த வீடியோவில் இந்த கோர விபத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளது. சங்கரா பரணி ஆற்றுப் பாலத்தில் விபத்து ஏற்பட்டதும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தின் பின்பக்கமாக வெளியேற்றப்பட்டனர். இதில் காயமடைந்த 35க்கும் மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், பேருந்தில் பயணித்த 35-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், டிரைவர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும்…
தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…
தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வரும்…