OMG: கழிவறையில் உள்ளே இருந்த பெண் பயணி.. கதவைத் திறந்த சக விமானி… இண்டிகோ விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்…!

By Srimathi on ஆவணி 20, 2025

Spread the love

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, இண்டிகோ விமானத்தில், மும்பை சேர்ந்த ரியா சட்டர்ஜி பயணம் செய்துள்ளார். இவர் விமானத்தின் கழிவறையில் இருந்த பொழுது, தனது இணை விமானி ஒருவர், திடீரென கழிப்பறை கதவை திறந்ததாக, ரியா குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தனது LinkedIn என்ற பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செயல் தனக்கு அதிர்ச்சியும், அவமானத்தையும் ஏற்படுத்தியதாக, அவர் தெரிவித்தார். கதவைத் திறந்த இணை விமானி, ‘ஓ’ என்று சொல்லிவிட்டு, உடனடியாக கழிப்பறை கதவை மூடிவிட்டதாகவும், இந்த சம்பவத்தை விமான பணிபெண்கள் அலட்சியம் செய்ததாகவும், குற்றம் சாட்டியுள்ளார். இண்டிகோ விமான ஊழியர்களின், இத்தகைய அலட்சியமான பதில், தனக்கு மன உளைச்சலை அளிப்பதாக தெரிவித்தார்.

   

இச்சம்பவம் குறித்து, தலைமை விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியும், நிறுவனம் முறையாக பதிலளிக்கவில்லை. நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாக, இவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது நோக்கம் என்று ரியா தெரிவித்துள்ளார். இந்த விமான நிறுவனம், சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை கூறுமாறு தெரிவித்தார்.