கின்னஸ் சாதனை, 500 கோடி சொத்து.. 67 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் காமெடி நடிகர் பிரம்மானந்தம்..!

By Nanthini on கார்த்திகை 28, 2024

Spread the love

தெலுங்கு திரை உலகில் சூப்பர் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரம்மானந்தம். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகின்றார். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தனது பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வரும் பிரம்மாநந்தம் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். முதன் முதலில் 1987 ஆம் ஆண்டு தெலுங்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அப்போது முதல் திரும்பி பார்க்க கூட நேரமில்லாமல் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர், பிரம்மானந்தம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

   

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வரும் இவரது கால் சூட்டுக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் காத்திருக்கும் சம்பவங்களும் அதிகம். தற்போது 67 வயதாகும் இவர் இந்திய அளவில் பணக்கார நடிகராக திகழ்கிறார். சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவருடைய சொத்து மதிப்பு 500 கோடிகளை தாண்டியுள்ளது. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் பிரம்மானந்தத்திற்கு மிக சிறப்பாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

   

Brahmanandam - Wikipedia

 

இந்த நிலையில் கடந்த 39 ஆண்டுகளில் ஆயிரம் திரைப்படங்களை முடித்த உலகின் ஒரே நடிகர் பிரம்மானந்தம் மட்டுமே என்ற பெருமையை தற்போது இவர் பெற்றுள்ளார். இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரம்மானந்தம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் தற்போது இந்த நிலையை எட்டி உள்ளார். இவருடைய வெற்றி கதை அனைவருக்கும் ஒரே ஒத்வேகம் அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.