தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள் மத்தியில் விவாகரத்து என்பது தொடர்கதையாகி விட்டது. திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த பிறகு காதல் வயப்பட்டு ஒரு சில நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்வதும் அதன் பிறகு சில வருடம் கழித்து விவாகரத்து செய்வதும் வழக்கமாகிவிட்டது. அதே சமயம் பல வருடங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் கூட சமீப காலமாக விவாகரத்து என்பதை அறிவித்து ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இப்படியான சூழலில் தமிழ் சினிமாவில் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் செழிப்பாக வாழும் ஆறு ஜோடிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவயானி ராஜகுமாரன்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த தேவயானி 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சுமார் 23 வருடங்களை கடந்தும் இந்த ஜோடி அனைவரும் வியக்கும் அளவுக்கு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது தேவயானி மீண்டும் சினிமாவில் நடிகையாக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/Ajith-family.jpg)
ஷாலினி – அஜித்!
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்று அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினி கேட்டது போல படம் முடிந்த கையோடு ஆரம்பமான திருமண வாழ்க்கை இன்று வரை அதே காதலோடு சென்று கொண்டிருக்கிறது. அஜித்தும் ஷாலினியும் காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்கள் சுமார் 24 வருடங்களை கடந்து இன்று வரை அதே காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறனர்.
/indian-express-tamil/media/media_files/5NWrkfv2XR127vSoG5YJ.jpg)
சரண்யா பொன்வண்ணன்:
தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்றுவரை சினிமாவில் பயணித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சரண்யா. இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சக நடிகரான பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சுமார் 30 வருடங்களைக் கடந்தும் இன்றும் நட்சத்திர ஜோடிகளாக தமிழ் சினிமாவில் பயணிக்கின்றனர்.

டி. ராஜேந்தர் – உஷா!
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் டி ராஜேந்திரன். இவர் உஷா என்பவரை 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் சிம்பு. அவரும் தற்போது சினிமாவின் உச்சத்தில் உள்ளார். 40 வருடங்களுக்கு மேலாக இந்த தம்பதியினர் இன்ப துன்பங்களை பகிர்ந்து சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

சூர்யா – ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் என்றால் அனைவருடைய நினைவுக்கும் வருவது சூர்யா ஜோதிகா தான். இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதலில் விழுந்த இவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா மற்றும் தேவு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகளை கடந்து தற்போது நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சினேகா – பிரசன்னா!
சினிமாவில் அனைவரும் வியக்கும் ஒரு நட்சத்திர ஜோடிகளாக உள்ளவர்கள் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. இவர்கள் படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டு பிறகு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சுமார் 12 ஆண்டுகள் கடந்து இன்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
