BREAKING: பயங்கர விபத்து… அதிகாலையில் 30 பேர் எரிந்து சாம்பல்… நாட்டையே நடுங்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் கர்னுல் மாவட்டம் உல்லிந்தகொண்டா கிராசில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து பைக் மீது மோதியத்தில் அதன் அடியில் சிக்கிய பைக் தீ பிடித்தது. இந்தக் கோர விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எறிந்தது. இன்று அதிகாலை 3:30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது.

விபத்து நடந்தபோது பேருந்தில் 40 பயணிகள் இருந்த நிலையில் அவர்களின் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். மீதம் உள்ளவர்கள் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டனர். இந்தக் கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலையிலையே நடந்த இந்த கோர விபத்து நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.