என் தங்கச்சிக்குச் சேர வேண்டிய சொத்து… அந்தப் பொம்பள கைக்குப் போயிரும்… நகைகளைக் கொள்ளையடித்து மைத்துனனே… கூலிப்படை ஏவிய பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 4, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில், தொழிலதிபர் கோட்டி வீர நாகய்யா என்பவர் திருமணமாகியும் மற்றொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதனால் சொத்துகள் அனைத்தும் அந்தப் பெண்ணிற்கே சென்றுவிடும் என்றும், தனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகள் சொத்துரிமை இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவரது மைத்துனரான ராஜேஷ் அஞ்சியுள்ளார்.

இந்த அச்சத்தின் காரணமாக, நாகய்யாவைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ராஜேஷ், ரூ. 4 லட்சத்திற்கு கூலிப்படையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி, சோமசுந்தரபாலீம் அருகில் வைத்து நாகய்யாவைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்ததோடு, அவரது உடலில் இருந்த தங்க நகைகளையும் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

   

நாகய்யாவைக் காணவில்லை என்று குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது இந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய ராஜேஷ் உட்பட மொத்தம் ஐந்து பேரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளதுடன், இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.