“ஸ்டிங் ஆபரேஷன்…” ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்… தமிழகம் முழுவதும் அதிரடி கைது…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் லஞ்சம் மற்றும் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் 18 பேர் கையும் களவுமாகச் சிக்கிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டிச் சார்பதிவாளர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் ‘தீபாவளி அன்புப் பரிசு’ என்ற பெயரில் லஞ்சப் பணம் மற்றும் பொருட்கள் வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ரகசிய கண்காணிப்பு மற்றும் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடத்தி அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

   

இந்தச் சோதனையின் போது, பொதுமக்களிடம் பத்திரப்பதிவு மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்க ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என மொத்தம் 18 பேர் கையும் களவுமாகப் பிடிபட்டனர். ரொக்கப் பணம் மட்டுமின்றி ஜிபே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாகவும் லஞ்சம் பெறப்பட்டது கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தீபாவளிப் பரிசு அல்லது லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளதால் இச்செய்தி இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.