திக்.. திக்..! மாமியாருடன் தகராறு… தொழிலதிபர் வீட்டில் மர்ம மரணம்… மின்விசிறியில் தொங்கிய மருமகள்… பின்னணியில் என்ன நடந்தது?…!!

By Gayathri on கார்த்திகை 3, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள முகுந்த் நகர் குடியிருப்புப் பகுதியில் 29 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மருமகளான இவர், திங்கள்கிழமை அதிகாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவருக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான குடும்பத் தகராறே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அழுத்தங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.