அரசின் முக்கியத் துறைகள் மற்றும் உளவுப் பிரிவுகளில் திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட அதிகாரிகளே நிரம்பியிருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைமை சந்தேகிக்கும் நிலையில், கோட்டை வட்டாரத் தகவல்கள் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்று சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளைத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிடுவதற்கு முன்பாகவே, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதுகுறித்த விவரங்கள் கசிந்ததாகவும், அதை அவர் பேரவையில் சுட்டிக்காட்டியதாகவும் பரவும் செய்திகள் நிருவாகக் கசிவை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தனக்கெதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்போவதை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையானதாகக் கூறப்பட்ட முந்தைய சம்பவத்தையும் சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், உளவுத் தகவல்கள் மற்றும் துறை சார்ந்த ரகசியங்கள் எதிர்க்கட்சிகளுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் முன்னதாகவே சென்றடைவதைக் கட்டுப்படுத்த முடியாமல் முதலமைச்சர் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
