தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்படும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரை அருகில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய்யின் இல்லத்திற்கு அருக17 50 மீட்டர் தொலைவில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதும், ஜோசியரின் அறிவுரைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பல்வேறு தரப்பில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தத் திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 9 மீனவ கிராம மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைமைச் செயலகம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, திமுக, அதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீனவர்களுடன் இணைந்து தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மீனவர்களா, தலைமைச் செயலகமா என்றால் முதல்வர் விஜய் மீனவர்கள் பக்கமே நிற்பார்” என்று தெரிவித்த போதிலும், பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் என்ற நிலைப்பாட்டை அரசு மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
மீனவர்களின் தொடர் எதிர்ப்புகளுக்கு இடையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள பழைய குடியிருப்புகளை இடிக்க சமீபத்தில் உத்தரவிடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்படவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர்களின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பொதுமக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் கருத்துக் கூட்டங்களை நடத்தி எப்படி தீர்வு காண்பது என்ற பெரிய சவாலை அதிகாரிகள் எதிர்கொண்டுள்ளனர்.
இத்தனை சிக்கல்களும் எதிர்ப்புகளும் நிலவினாலும், எந்தப் பிரச்சனை வந்தாலும் சரி, பட்டினப்பாக்கத்திலேயே புதிய தலைமைச் செயலகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு முதல்வர் விஜய்யும் தவெக தலைமையும் உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக் கோரிக்கையும், அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுதியும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளதால், இப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…