சென்னையில் செயல்படும் சென்னை பல்கலைக்கழகம் சமீபத்தில் மரபியல் ஆய்வு திட்டத்திற்கான பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான சிறப்பு அம்சம் என்னவெனில், எழுத்துத் தேர்வு இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலமே தேர்வு நடைபெற உள்ளது. குறிப்பாக உயிரியல், மரபியல், பயோடெக்னாலஜி போன்ற துறைகளில் M.Sc முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மேலும் இந்த பணியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.31,000 அடிப்படை சம்பளத்துடன் HRA சேர்த்து சுமார் ரூ.38,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முழுக்க ஆராய்ச்சி திட்ட அடிப்படையிலானதாக இருப்பதால், அனுபவம் இல்லாதவர்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் கல்வித் தகுதி மற்றும் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையில் முதலில் தகுதி அடிப்படையில் குறுகிய பட்டியல் தயாரித்து, பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அரசு கட்டணமின்றி இல்லாமல் விண்ணப்பிக்க முடிவது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். ஆராய்ச்சி துறையில் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்க வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
