அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) அவசர மற்றும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை இன்று தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக, தவெக பக்கம் நிர்வாகிகள் படையெடுத்த வேலூர், செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் அவர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
குறிப்பாக, செங்கல்பட்டின் மரகதம் குமரவேல் மற்றும் புதுக்கோட்டையின் சி.விஜயபாஸ்கர் போன்ற செல்வாக்குமிக்க முக்கியத் தலைவர்கள் தவெக-வில் இணைந்ததால் அந்த மாவட்டங்களில் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்யும் நோக்கில் இக்கூட்டம் நடைபெறுகிறது. வெளியேறிய நிர்வாகிகளால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்தைக் களைந்து, அந்தந்த மாவட்டங்களில் அதிமுகவின் உட்கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதையும், தொண்டர்களைத் தக்கவைப்பதையுமே இலக்காகக் கொண்டு இபிஎஸ் இந்த அதிரடி ஆலோசனையை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
