சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்துக்குரியது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
