2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயுடன் கூட்டணி?… ஒரே வார்த்தையில் ஓபிஎஸ் சொன்ன நச் பதில்..!

By Nanthini on ஆடி 30, 2025

Spread the love

விஜயின் தமிழக வெற்றி கழகம்  கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். பாஜகவுடன் மனக்கசப்பில் இருக்கும் ஓபிஎஸ் நாளை பல முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்ட நிலையில் பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதற்கு முன்னதாக தமிழகம் வந்த அமித்ஷாவும் ஓபிஎஸ்ஐ சந்திக்காமல் தவித்தார்.

தற்போது பிரதமரும் தவிர்த்து இருப்பது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கூட்டணியை முறித்துக் கொண்டு ஓபிஎஸ் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கைகோர்ப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டது. இப்படியான சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், தமிழக வெற்றி கழகம் கட்சி உடனான கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைத்து கேள்விகளுக்கும் நாளை சென்னையில் வைத்து பதிலளிக்கப்படும் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு சென்றார்.