புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூலக்குளம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியதும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாணவியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. உடனடியாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டபோது மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு குடும்பத்தினர் கதறி எழுதினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…