இமாச்சலப் பிரதேசம் மாநிலம் மண்டி அருகே உள்ள சவுகார் காட் பகுதியில் சுந்தர் என்ற மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மருத்துவமனை வசதி எதுவும் இல்லாததால் கிராம மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பக்கத்து ஊரான டிகாரில் இருந்து மருத்துவர் அல்லது நர்ஸ் வரவேண்டும். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில் பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற சூழல் இருந்தது. இதனால் மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமத்தை கடந்து செல்ல சிற்றாறு ஒன்றை கடக்க வேண்டும். தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் நோய் ஏதாவது வந்து விடுமோ என்று தாய் அஞ்சி உள்ளார். ஆனால் பக்கத்து ஊரில் நர்சாக பணியாற்றி வரும் கமலாவோ, குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய ஆகவேண்டும் என ஒற்றை காலில் நின்றார். அதற்காக தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். தனது உயிரை துச்சமாக எண்ணி அந்த ஆற்றைக் கடந்து கடமையை அவர் நிறைவேற்றிய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…
தமிழகத்தில் மக்கள் சேவை மற்றும் சமூகப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை"…
பாகிஸ்தானின் கொந்தளிப்பான மாகாணமான பலுசிஸ்தானின் சஹ்ரி பகுதியில், பிஎன்பி (BNP) கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் மேயருமான சர்தார் நசீர்…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முன்னாள் அமைச்சர்கள்,…
வாஷிங்டன் மாநிலத்தின் நியூபோர்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று உயர்நிலைப் பள்ளியான பெண்ட் ஓரில் ரிவர் பள்ளியில் ஆசிரியராகவும் இயக்குநராகவும்…
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் என்பவருக்கும், மன்னாந்தலை பகுதியைச் சேர்ந்த 36…