பகீர்… சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்.. குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. கத்தியை வாஷ்பேஷனில் கழுவிய கொடூரம்…!!

Spread the love

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் என்பவருக்கும், மன்னாந்தலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஹசீனா பீவி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நாலாஞ்சிர பகுதியில் வசித்து வந்த நிலையில், மனைவியின் நடத்தை மீது சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், வருத்தமடைந்த ஹசீனா குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் நான்கு வாரங்கள் கழித்து அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய போதும் கணவன்-மனைவி இடையே தகராறு நீடித்துள்ளது.

சுரேஷின் தொல்லை பொறுக்க முடியாமல் ஹசீனா செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தன் மீது புகாரளித்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டிற்குச் சென்றதும் மீண்டும் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில், சுரேஷ் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தனது நான்கு குழந்தைகளின் கண்முன்னே மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார்.

கொலை செய்த பிறகு, சுரேஷ் ரத்தக் கறையை வாஷ்பேஷனில் கழுவிவிட்டு, சாதாரணமாகக் கழிவறைக்குச் சென்று குளித்துவிட்டு தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஹசீனா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய சுரேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

3 minutes ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

3 minutes ago

“டிகிரி முடிச்சிருக்கீங்களா?.. 7,150 காலிப்பணியிடங்கள்.. கடைசி தேதி நீட்டிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. SBI அதிரடி அறிவிப்பு”..!!

வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…

12 minutes ago

தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… அதிருப்தியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவுகள்… சிக்கலில் முதலமைச்சர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…

16 minutes ago

அடேங்கப்பா!.. பிரம்மாண்ட ஏற்பாடு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு செம்ம அடி.. டிராக்டரிலேயே ‘ஸ்விம்மிங் பூல்’ அமைத்து வலம் வரும் மாஸ் வாலிபர்.. வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…

22 minutes ago

“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க உதயநிதி..!” – தவெக ஆதவ் அர்ஜுனா விடுத்த நேரடி சவால்..!  எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்…!!

விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…

31 minutes ago