சவுதிக்கு டிரம்ப் வைத்த ‘செக்-மேட்’… இஸ்ரேலை ஏத்துக்கோங்க… இல்லனா அவ்வளவுதான்… அணுசக்தி தொழில்நுட்பம் வேணாமா?… அமெரிக்காவின் அதிரடி முடிவு… அதிர்ச்சியில் மத்திய கிழக்கு நாடுகள்…!

Spread the love

மத்திய கிழக்கு பிராந்திய அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் சவுதி அரேபியாவில் சிவில் பயன்பாட்டுக்கான அணுமின் நிலையங்களை அமைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும், இந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வர வேண்டுமானால், சவுதி அரேபியா இஸ்ரேலை ஒரு தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ இணைய வேண்டும் என்ற அதிரடி நிபந்தனையை அவர் முன்வைத்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் மதிப்பில் சவுதியில் அணு உலைகளைக் கட்ட வழிவகை செய்யப்படும். அதேவேளையில், அணு ஆயுதப் பெருக்கைத் தடுக்கும் நோக்கில், சவுதி அரேபியா சொந்தமாக யுரேனியத்தை செறிவூட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச அணுசக்தி முகமையின் கடுமையான கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்படும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுத் கட்சி பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த ஒப்பந்தம் எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இது எதிர்காலத்தில் பிராந்திய அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்குமோ என்ற கவலையை சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.

டிரம்பின் இந்த நிபந்தனையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வரவேற்றுள்ள நிலையில், இது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரலாற்றுப் பாய்ச்சல் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம், “தனி பாலஸ்தீன நாடு அமைக்கப்பட்டால் மட்டுமே இஸ்ரேலை அங்கீகரிப்போம்” என்ற உறுதியான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள சவுதி அரேபியா, டிரம்பின் இந்த செக்-மேட் நகர்வுக்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறது.

Visaka

Recent Posts

“இனி தப்பவே முடியாது”…. அரிவாள் வெட்டு ரவுடி, புதுச்சேரி சாராய அழகி… மயிலாடுதுறை எஸ்பி தூக்கிய ‘குண்டாஸ்’ சாட்டை…!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள்…

6 minutes ago

“ப்ளீஸ் வேண்டாம்…. என்னை வாழ விடுங்க”…. நடுரோட்டில் துடிதுடித்த 2 குழந்தைகளின் தாய்…. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி…..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் பூமிராஜா (39). இவருக்குச் செல்வராணி (35) என்ற மனைவியும் இரு…

17 minutes ago

“2017-க்கு அப்புறம் எல்லாமே போச்சு… சீக்கிரமே எடப்பாடி தனிமரம் ஆவாரு”…. சாபம் விட்ட EX அமைச்சர் செம்மலை…. பரபரப்பு….!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக…

28 minutes ago

“என்ன கொடுமை சார் இது?”…. கழுதைக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் கொடுத்த  அரசு…. மத்திய பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை….!

மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…

41 minutes ago

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…

54 minutes ago

விஜய் கூட்டணியில் சௌமியா அன்புமணி?… குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்…. கடைசி நேரத்தில் வெளியான பகீர் உண்மை….!

தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…

1 மணத்தியாலம் ago