Categories: சினிமா

பெரிய மனுஷன் இமேஜால் வாய்ப்புகள் வரமாட்டேங்குது… வாலியிடம் கடைசி காலத்தில் வருத்தத்தை வெளிப்படுத்திய NSK!

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புகழ் பெற்றார்.

முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். என் எஸ் கே மற்றொரு நல்ல குணம் அவரின் ஈகைதான். தமிழ் சினிமாவில் வள்ளல் என்று பெயர் பெற்ற எம் ஜி ஆருக்கு முன்னோடியாக இருந்தவர் என் எஸ் கே. தான் நடித்து சம்பாதித்த செல்வம் முழுவதையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவிட்டுள்ளார். தனது வாரிசுகளுக்குக் கூட எந்த சொத்தையும் அவர் சேர்த்துவைக்கவில்லை.

#image_title

அரசியல் தளத்தில் தீவிரமாக இயங்கி வந்த பெரியார், சினிமாவையும் சினிமாக் காரர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர்களைக் கூத்தாடி என்று அழைத்து அவர்களால்தான் மக்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கிறார்கள் என்று திட்டித் தீர்த்தார். அப்படி பட்ட பெரியாரே என் எஸ் கே அவர்களைப் பாராட்டி தன்னுடைய குடி அரசு பத்திரிக்கையில் எழுதியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அதற்குக் காரணம் கலைவாணர் தொடர்ந்து முற்போக்கான விஷயங்களைப் பேசி வந்ததுதான்.

இப்படிப்பட்ட என் எஸ் கே அவர்களுக்குக் கடைசி காலத்தில் வாய்ப்புகள் குறைந்தது பற்றி பாடல் ஆசிரியர் வாலி வருத்தப்பட்டுள்ளார். அதில் “கடைசி காலத்தில் என் எஸ் கே வுக்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை. அதற்குக் காரணம் இளம் ஹீரோக்கள் அவர் மேல் வைத்திருந்த மரியாதைதான். அவர் பெரிய மனுஷன். அவர் நம்ம படத்துல இருந்தா நம்மளால செட்ல சிகரெட் கூட குடிக்க முடியாதுன்னு பலரும் அவரை தவிர்த்தார்கள். இதை என் எஸ் கே வருத்தத்தோடு என்னிடமே சொல்லியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago