இனி செல்போனே போதும்… வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்… புதிய ஆதார் செயலியை அறிமுகம் செய்தது UIDAI..!!

By Soundarya on தை 28, 2026

Spread the love

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இன்று மேம்படுத்தப்பட்ட புதிய ஆதார் செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன செயலியின் மூலம் பொதுமக்கள் தங்களின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதார் மையங்களுக்கு அலையாமல், தங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் வாயிலாகவே எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் இனி அச்சிடப்பட்ட அசல் ஆதார் அட்டையை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற அதிரடி மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியில் உள்ள டிஜிட்டல் ஆதாரை (Digital Aadhaar) காண்பித்தே அனைத்து விதமான அடையாளச் சரிபார்ப்புகளையும் இனி எவ்விதத் தடையுமின்றி மேற்கொண்டு விடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் இந்த வசதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.