ஏங்க இனி எல்லாரும் சீக்கிரம் கூமாப்பட்டிக்கு போகலாம்… தமிழக அரசு எடுத்த அதிரடி..!!!

By Srimathi on ஆவணி 28, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாபட்டி, தங்கப்பாண்டி என்பவரின் instagram ரீல்ஸால் ட்ரெண்ட் ஆனது. “ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம். நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க, இந்த சொர்க்க பூமியின் தண்ணியை பாருங்க… சர்பத், பவன்டோ, செவன்அப் மாதிரி இருக்குதுங்க…தென் மாவட்டத்தில் கூமாபட்டி ஒரு தனி ஐலேண்ட்” என்று பேசி ரிலீஸ் வெளியிட்டு இருந்தார்.

இந்த இந்த ரீசை கண்டு, வெளியூர் நண்பர்கள் கூமாபட்டிக்கு படை எடுத்தனர். கூமாபட்டி கிராமத்தில் பிளவக்கல் அணை, கோவில் ஆறு அணை போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல பொதுப்பணித்துறை தடை அறிவித்திருந்தது. பிளவக்கல் பெரியாறு அணையின் அருகே உள்ள பூங்காவில், விளையாட்டு உபரங்கள் அனைத்தும் சேதம் அடைந்திருந்தது. இதனை சரி செய்ய, பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். இந்நிலையில் பூங்காவை மேம்படுத்த, ரூ. 10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு வழங்கியது. அப்பூங்காவில் சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்பி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. இதை தமிழக முதலமைச்சர், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அரசாணையை வெளியிட்டார்.