மத்திய அரசின் கீழ் இயங்கும் மண்டல கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,715 பணியிடங்களை நிரப்புவதற்கான பிரம்மாண்ட அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 464 பணியிடங்கள் காலியாக உள்ளது வேலைதேடும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆபிஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஐடி, சிஏ, சட்டம், மார்க்கெட்டிங், வேளாண்மை உள்ளிட்ட ஆபிஸர் பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை டிகிரி முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் தோறும் ரூ.35,000 முதல் ரூ.90,000 வரை கைநிறையச் சம்பளம் வழங்கப்படும்.
பிரிலிமினரி , மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப் பணிக்கான பொது விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்தின் https://www.ibps.in/ வாயிலாக வரும் செப்டம்பர் 21-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
