பிரபல நடிகரான ரவி மோகன் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். ரவி மோகன் ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகனின் விவாகரத்து விவகாரம் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை ஈ.சி.ஆர்-ல் உள்ள ரவிக்கு சொந்தமான சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்ததால் பங்களாவை ஜப்தி செய்ய ஹெச்டிஎஃப்சி வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை பெற ரவி மோகன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த நோட்டீசை வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் ஊழியரை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
