தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு இருந்தால்தான் அரசு வழங்கக்கூடிய அத்தியாவசிய பொருள்களை ரேஷன் கடைகளில் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் பல நிதி உதவிகளை குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு கூட ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதனை தற்போது ஆன்லைன் மூலமாக எதிரில் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.
அதன்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். அதாவது www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பி விட்டு தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் 30 முதல் 45 நாட்களில் விண்ணப்பத்தை நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
