தமிழக அரசு 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதியை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரை (HM) அணுகி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறுவதற்கு மாணவர்கள் மே 22-ஆம் தேதி முதல் தங்களது பள்ளிகளை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்குச் செல்ல முடியாதவர்கள் அல்லது நேரடியாகப் பெற விரும்பாதவர்கள் இணையதளம் மூலமாகவும் இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமிழக தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கு ‘Notification’ பகுதியைத் தேர்வு செய்து, ‘SSLC PROVISIONAL MARK CERTIFICATE’ என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தங்களது தேர்வு விவரங்களை உள்ளிட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தாங்களாகவே எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
