காலையிலேயே பரபரப்பு..! “3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால்” தவெக எம்.எல்.ஏ. பல்லவிக்கு திமுக நோட்டீஸ்..!!

Spread the love

சென்னையில் நிலவும் மின்வெட்டு விவகாரம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிராக அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, திரு.வி.க. நகர் தொகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எம்.எல்.ஏ. பல்லவிக்கு திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பி, அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயன்றதாக அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதாரங்கள் ஏதுமின்றி அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸின்படி, தவெக எம்.எல்.ஏ. பல்லவி தான் வெளியிட்ட கருத்துகளுக்காக அடுத்த 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மன்னிப்பு கேட்கத் தவறினால், உரிய இழப்பீடு கோரியும், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களின் கீழ் கடுமையான சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் திமுக தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிடையேயான அரசியல் மோதலை தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

1 மணத்தியாலம் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

2 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

2 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

2 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

2 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago