தமிழகத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு, மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உள்நோக்கத்துடன் தன் மீது கூறப்பட்ட அவதூறு கருத்துக்களை அவர்கள் திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வெளியிட மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் சபரீசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் சபரீசன் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
