மக்கள் தொகை மட்டுமல்ல இந்த விஷயத்திலும் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா… அது என்னனு தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க…

By admin on மாசி 9, 2025

Spread the love

எப்போதுமே ஒரு சில விஷயங்களில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு போட்டி நிலவிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தை பொறுத்தவரையில் முதலாவதாக இருக்கிறது. இப்போது மக்கள் தொகை மட்டுமல்லாமல் இன்னொரு விஷயத்திலும் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளி இருக்கிறது. அது என்ன விஷயம் என்பதை பற்றி இனி காண்போம்.

   

வைர சந்தையில் தான் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளி இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய வைரசந்தையாக இந்தியா இடம் பிடித்து சீனாவை பின்னுக்கு தள்ளியது. இது எப்படி சாத்தியமானது என்றால் இந்தியாவின் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சி தான் காரணம் என்று பாராட்டுகளை உலக தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

   

சீனாவில் வைரத்தின் தேவை குறைந்து வருவதால் இந்தியாவில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. என்னதான் தங்கம் வைரம் பிளாட்டினம் போன்றவை விலை ஏறினாலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அவைகளுக்கு மவுசு இருக்கத்தான் செய்யும். வைரசந்தையை பார்க்கும் வரையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஓரளவு சரிந்துள்ளதால் ஆடம்பரத்துறை முழுவதுமே சரிவை சந்தித்து இருக்கிறது. அதன் காரணமாக வைரத்தின் தேவையும் சீனாவில் குறைந்துள்ளது.

 

அதன் விளைவாக இந்தியாவின் உள்நாட்டு வைர இருப்பு என்பது உயர்ந்துள்ளது. உலக வைரசந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாக நிலை நிறுத்திக் கொள்ள இது முக்கிய காரணமாக அமைந்தது. உலகளவில் பார்க்கும்போது அமெரிக்கா வைரச் சந்தையில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.