வருகிற விடுமுறையில் காஷ்மீர் டூர் போவோமா…? வருகிறது சென்னை- காஷ்மீர் சுற்றுலா ரயில்… முழு விவரங்கள் இதோ…

By admin on மாசி 9, 2025

Spread the love

இந்தியாவில் மிகவும் குழுமையான ஒரு இடம் என்றால் அது காஷ்மீர் தான். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒருமுறையாவது காஷ்மீர் சென்று அங்கு இருக்கும் பனி மலைகளை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கோடை விடுமுறையில் அதிகமாக சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு செல்வதுண்டு. அப்படி சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப தற்போது சென்னையில் இருந்து காஷ்மீர் இடையிலான சுற்றுலா ரயில் இயங்கவுள்ளது. அதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.

   

இந்தக் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல ரயில்வே துறை ஒரு சிறப்பான ரயிலை இயக்குகிறது. ஏப்ரல் இரண்டாம் தேதி இந்த சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகிறது. அங்கிருந்து கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், போத்தனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், குண்டூர் வழியாக செல்கிறது.

   

இந்த சுற்றலா ரயில் மொத்தமாக 15 நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறது. இந்த 15 நாட்கள் பயணத்தில் ஆக்ரா, டெல்லி, அமிர்தசரஸ், ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரில் உள்ள குல்மார்க், சோன்மார்க் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயிலில் மொத்தம் 650 பயணிகள் பயணம் செய்யலாம். நபர் ஒருவருக்கு ரூ 41,600 முதல் ரூ 65,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 5 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.

 

இந்த சுற்றுலா ரயில் மூலம் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் www.tourtimes.in என்ற இணையதளம் வாயிலாக அல்லது 7305858585 என்ற எண் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும். யாரெல்லாம் காஷ்மீருக்கு டூர் போக வேண்டும் விரும்புகிறீர்களோ இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.