இந்த உலகம் ஏ.ஐ டிஜிட்டல் உலகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரம் நெட்வொர்க் ப்ராப்ளம் வந்தாலே நம் நாட்டில் நிறைய இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் இருக்கிறோம். அந்த அளவுக்கு மக்கள். அலுவலகம் என நிறைய இடங்களில் இணையதளத்தை தான் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த டிஜிட்டல் உலகத்திலும் ஒரு நாடு மட்டும் இது போன்ற எந்த வசதியும் இணையதளங்களும் இல்லாமல் வாழ்கிறது .
அதுவே, கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த எரித்திரியா நாடு. இதுவரை இணைய வசதி ஏதுமில்லாமலும் மொபைல் பிராட்பேண்ட் உள்ளிட எந்த இணைய வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றன. நகரங்களில் உள்ள சில கஃபேக்கிளில் மட்டுமே வைபை[wifi ] இணையதளம் கிடைக்கிறது. அதை பயன்படுத்துவோரும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. அதுவும் 2ஜிக்கு குறைவான இணைய வேகம் தான் உள்ளது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்களே பயன்படுத்துவதற்கு காரணம் இந்நாடு மிகவும் ஏழ்மை நாடாக இருக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு கட்டணமாக 100 ரூபாய் வசூலிகிறார்கள். இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய பாதுகாப்பை காட்டி அரசாங்கமே இணையதளங்களை முடக்கி வைத்துள்ளதாம். இணைய வசதி இல்லாமல் அந்நாடு கல்வி, பொருளாதாரம் இது போன்ற கடுமையான பின் தங்கிய நாடாக இன்று வரை உள்ளது. இந்த நாட்டில் ஏடிஎம் வசதி கூட இல்லை.
இங்குள்ள மக்கள் கட்டாயம் ராணுவ சேவை செய்ய வேண்டும் என்று நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது . கிட்டத்தட்ட ‘ஆப்பிரிக்காவின் வடகொரியா’ என்று அலைக்காலம் . வடகொரியா கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை வைத்திருந்தாலும் இணைய வசதி எல்லாம் உள்ளது. எரித்திரியா சென்ற இந்தியாவை சேர்ந்த பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளார்.
