பீகாரை சேர்ந்த 24 வயது பி.டெக் மாணவர் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள கயா மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் தீப், தில்லி தொழில்நுட்பக் கல்லூரியில் பிடெக் படிப்பை படித்து வந்தார். நொய்டாவில் உள்ள விடுதியில் தனது நண்பர்களுடன் அவர் தங்கி இருந்தார். இதனிடையே நேற்று முன்தினம் மாலை ஆகாஷ் தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததால் விடுதி ஊழியர்களும் அவருடைய நண்பர்களும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்த போது விடுதியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. கல்வி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சம்பவ இடத்திலிருந்து ஒரு குறிப்பு மீட்கப்பட்டது. மாணவனின் உடல் உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவன் எழுதிய கடிதத்தில், அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. என் சாவுக்கு நான் மட்டுமே பொறுப்பு என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…