“வேலை இல்லைனா காசும் இல்லை”…. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி செக்…. இனி ஒரு நிமிடம் வெளியே போனாலும் வேலை காலி?…. அரசு அவசர உத்தரவு….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

“வேலை இல்லையேல் ஊதியம் இல்லை” (No Work, No Pay) என்ற விதியை டாஸ்மாக் நிர்வாகம் மிகக் கடுமையாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன்படி, மதுக்கடை ஊழியர்கள் பணிக்கு நேரடியாக வந்து பணிபுரிந்தால் மட்டுமே அன்றைய நாளுக்கான ஊதியம் வழங்கப்படும் என்றும், தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் கடைகளை பூட்டிவிட்டு வெளியேறக் கூடாது என்றும் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் பணி நேரத்தில் எந்தவித போராட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடக் கூடாது என எச்சரித்துள்ள நிர்வாகம், விதிகளை மீறுவோர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.