தவெக-வில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’ வைத்த விஜய்..? இடைத்தேர்தலில் சீட் கிடையாது என அதிரடி முடிவு..!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க தவெக தலைமை மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. சுயநலத்திற்காகத் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு கட்சி மாறிய இவர்கள் மீது தொகுதி மக்கள் கடும் கோபத்தில் இருப்பது, கட்சித் தலைமை நடத்திய ரகசிய கள ஆய்வில் வெளிவந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இவர்களுக்குச் சாதகமான நற்பெயர் இல்லாததைக் சுட்டிக்காட்டி, தவெக தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கட்சி மாறிய இந்த நான்கு பேரின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக அதிமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது பதவிக் காலம் முடிவதற்குள் சுய லாபத்திற்காகத் தன்னிச்சையாகப் பதவிகளைத் துறந்தது செல்லாது என அதிமுக அந்த மனுவில் வாதிட்டுள்ளது. இது தொடர்பான சட்டப் போராட்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், தவெக தலைமையின் இந்த முடிவு கட்சி மாறிய முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.