வெடித்தது மோதல்..! ரஜினி யாருக்கும் அஞ்சுபவபர் அல்ல.. விஜய் போல அற்ப அரசியல் செய்யல.. கொந்தளித்த ரஜினி ரசிகர்..!!

By Soundarya on பங்குனி 13, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் அரசியலில் இருந்து பின்வாங்கினார் என விமர்சித்திருந்தார். இந்த கருத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.பி.எஸ். ரவி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ரஜினிகாந்த் அரசியலை கைவிட்டதற்கு மிரட்டல் காரணமல்ல, மாறாகத் தான் கொண்ட கொள்கையே காரணம் என்று ரவி விளக்கியுள்ளார். கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், தனது பலத்தை நிரூபிப்பதற்காகத் தன்னை நம்பி வரும் தொண்டர்களின் உயிரைப் பணையம் வைக்கும் “அற்ப அரசியலை” செய்ய ரஜினிகாந்த் விரும்பவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் உயிர் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு அவர் எடுத்த அந்த முடிவு, ஒரு தலைவனுக்கே உரியப் பண்பு என அவர் புகழ்ந்துள்ளார்.

   

மேலும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்துத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்கள், சுய விளம்பரத்திற்காகவே இது போன்ற கருத்துகளைத் தெரிவிப்பதாக ரவி சாடியுள்ளார். ரஜினிகாந்த் எதற்கும் அஞ்சுபவர் அல்ல என்பதை வரலாறு அறியும் என்றும், இனியும் இது போன்ற ஆதாரமற்ற விமர்சனங்களைத் தவெக நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த நேரடி மோதல் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.