தன்னம்பிக்கையும் கண்ணீரும் கலந்த இந்த நெஞ்சை உருக்கும் கதை, ராஜஸ்தான் மாநிலம் ஹிந்தோன் சிட்டி பமன்புராவில் உள்ள அரசு மகாத்மா காந்தி பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனுடையது. “அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை; தாத்தாவின் பென்ஷன் பணம் வந்தால்தான் எனக்குப் புதுச் சீருடை கிடைக்கும்” என்று அந்தச் சிறுவன் மழலை மாறாத குரலில் கூறியபோது, அங்கிருந்தவர்களின் இதயமே ஒரு நிமிடம் நின்றுபோனது.
மேலும் வறுமையின் பிடியில் சிக்கி, அடிப்படைத் தேவைகளுக்கே தன் தாத்தாவின் சொற்ப வருமானத்தை எதிர்நோக்கி இருக்கும் அந்தச் சிறுவனின் நிலை, சமூகத்தின் மறுபக்கத்தை நமக்கு அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது. அந்தச் சிறுவனின் ஏக்கத்தைக் கண்ட அங்கிருந்த ‘குருஜி’, அவனுக்குத் தேவையான சட்டை மற்றும் கால்சட்டையைத் தன் சொந்த முயற்சியில் வழங்கினார்.
पापा और मम्मी दोनों जीवित नहीं है, दादा जी का पेंशन का पैसा आएगा तब नया स्कूल ड्रेस आएगा। फिर गुरुजी ने एक शर्ट पैंट दिया।
राजस्थान के हिंडौन सिटी के बमनपुरा के राजकीय महात्मा गांधी विद्यालय के इस बच्चे की कहानी आपको भावुक कर देगा । pic.twitter.com/uGwu5j36fB
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) March 12, 2026
“>
இந்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வமிருந்தும், உடுக்க உடை இல்லாமல் தவித்த அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு ஆசிரியரின் இந்தச் செயல் ஒரு பெரும் ஆறுதலாக அமைந்தது. இந்தப் பென்ஷன் பணத்திற்காகக் காத்திருக்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கை, வெறும் செய்தியாக இல்லாமல், கல்வியும் கருணையும் இணைந்தால் மட்டுமே இத்தகைய ஏழைச் சிறுவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்கிற பாடத்தை நமக்கு உணர்த்துகிறது.
