இனி தாலுகா அலுவலகம் பக்கம் போகவே வேண்டாம்..! 30 நாளில் வீடு தேடி வரும்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் முறை அமலில் உள்ளது. இந்த விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புதிய உட்பிரிவு எண் உருவாக்க வேண்டிய தேவை இருப்பின் நில அளவையர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே அனுப்பப்பட்டு வந்தன. எனினும், நில அளவையர்கள் நிலத்தை அளந்த பிறகு கள ஆய்வு அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிப்பு போன்ற பணிகளைக் கையால் எழுதும் ‘மேனுவல்’ முறையில் காகித ஆவணங்களாகவே செய்து வந்தனர்.

இந்த இரட்டை வேலை மற்றும் மேனுவல் நடைமுறையால் பட்டா மாறுதல் பணிகளில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, நிலத்தை அளந்து குறிப்புகள் எழுதுதல் மற்றும் வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேனுவல் முறையில் மேற்கொள்வதை முற்றிலும் நிறுத்த நில அளவைத்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பப் பதிவு முதல் புதிய பட்டா மற்றும் நில அளவை வரைபடம் உருவாக்கம் வரை அனைத்துப் பணிகளும் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

   

இந்த புதிய உத்தரவின்படி, நில அளவையர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றத்தால், பொதுமக்கள் தங்களது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் உத்தரவை விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடவடிக்கை பட்டா மாறுதலில் நிலவி வந்த காலதாமதத்திற்கும், முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.