“2 சீட்டுக்கு மேல் கிடையாது!” – ஐஜேகே-வுக்கு எடப்பாடி போட்ட அதிரடி முட்டுக்கட்டை.. அதிமுக கூட்டணியில் வெடித்த மோதல்!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட என்டிஏ பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகவும் கறாரான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்துள்ளனர். இதில் புதிய நீதிக் கட்சி 6 தொகுதிகளைக் கோரிய நிலையில், அதிமுக தரப்பில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாரிவேந்தரின் ஐஜேகே தரப்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டதற்கு, 2 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தொகுதி எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், சின்னம் தொடர்பான விவகாரத்திலும் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐஜேகே நிர்வாகிகள் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட மறுத்து, தனிச் சின்னத்தில் தான் களம் காண்போம் எனப் பிடிவாதம் பிடித்துள்ளனர். மற்றொருபுறம், புதிய நீதிக் கட்சியோ இரட்டை இலைக்குப் பதிலாகத் தாமரைச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்ட மாநிலங்களவை (ராஜ்யசபா) சீட் கோரிக்கையை அதிமுக தலைமை அதிரடியாக நிராகரித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்திச் சிறிய கட்சிகள் அதிக இடங்களைக் கேட்டு அழுத்தம் கொடுத்தாலும், அதிமுகவின் பலத்தைச் சிதறவிடாமல் இருப்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார். தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இந்த இழுபறி காரணமாக, வரும் நாட்களில் அதிமுக கூட்டணியில் சின்னங்கள் மற்றும் தொகுதிகள் தொடர்பாக மேலும் சில அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Muthu Mani

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

5 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

15 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

54 minutes ago