தமிழகத்தில் 2026 தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. மக்களை சந்திக்கும் வேலைப்பாடுகளும், கூட்டணி குறித்த பேச்சு, தொகுதி பங்கீடு என தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்களுடைய கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகின்றன. பாமகவில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக மற்றும் கூட்டணியை இதுவரை வெளியிடாமல் உள்ளது. திமுக பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமாரும் பிரேமலதாவும் சந்தித்து பேசியதால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் பிரேமலதா விஜயுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை பிரேமலதா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கப்படுவதாக அதிமுக அறிவித்திருந்தது. ஆனால் அதிமுகவிற்கு தேமுதிக பிடி கொடுக்காமல் இருந்த நிலையில் ராஜ்யசபா சீட்டுக்காகல்லாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பிரேமலதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவை மனதில் வைத்தே அவர் இவ்வாறு பேசியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
