90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சன் மற்றும் ரவீனாவின் சம்பளம் இவ்வளவா..? ஷாக்கிங் தகவல்…

By Begam on மார்கழி 31, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதலே சண்டைக்கு பஞ்சம் இல்லாத இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் நெட்டிசன்களால் அதிகம் ரோல் செய்யப்படும் வந்தது. இந்நிகழ்ச்சியில்  கூல் சுரேஷ், பாவா செல்லதுரை,, விசித்ரா, விஷ்ணு ,வினுஷா தேவி, சரவணன் விக்ரம், ஜோவிகா உட்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

#image_title

இவர்களில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து பாவா செல்ல துரை அவராகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நன்றாக சென்று கொண்டிருந்த  இந்நிகழ்ச்சியில் ஒரு புயல் அடித்தது. அதுதான் பிரதீப் ரெட் கார்டு விவகாரம். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி வெடித்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.

   
   

#image_title

 

இதில் அர்ச்சனா, தினேஷ் இருவரும் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரை நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.  தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இன்றுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியானது 91 நாட்களையும்  நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையவுள்ள இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை அறிய தற்பொழுது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

#image_title

இறுதி போட்டியில் மொத்தம் 5 போட்டியாளர்கள் மட்டும் தான் நுழைய முடியும்.  இந்த வாரம் விசித்ரா, ரவீனா, நிக்சன் என 3 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், இதில் குறைவான வாக்குகளை பெற்று ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ரவீனா மற்றும் நிக்சன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .

#image_title

அதன்படி 90 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த ரவீனாவிற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 18000 சம்பளமாக பேசப்பட்டு, 16 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்றும், அடுத்த போட்டியாளரான நிக்சன் ஒரு நாளைக்கு ரூபாய் 13 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டு 90 நாட்களுக்கு மொத்தம் 11 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.