Connect with us

CINEMA

தொடரும் நிக்சனின் லீலைகள்… பிக் பாஸ் வீட்டில் ஐஷுவிடம் அத்துமீறிய நிக்சன்…  ‘பெண்கள் பாதுகாப்பு சூப்பர்’.. கமலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…(வீடியோ)

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  துவங்கியது முதலே ஜோவிகாவின் சில செயல்கள் கடும் விமர்சனத்தை பெற்று நிகழ்ச்சியை பரபரப்பாக்கிய நிலையில், பிரதீப், மாயா, ரவீனா – மணி ஆகியோரின் செயல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதைத்தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

   

இந்த 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை  பிரபலங்களும், ரசிகர்களும்  தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு காதல் ஜோடிகள் வலம் வந்து கொண்டுள்ளனர். மணி-ரவீனா இவர்களிருவரை பற்றியும் நமக்கு தெரியும். அடுத்த காதல் ஜோடி ஐஷு -நிக்சன். இவர்கள் அவ்வப்பொழுது எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட குறுக்கே கண்ணாடி இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலானது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது வேட்டியும் , சட்டையும் அணிந்துள்ளார் ஐஷு. இதைப்பார்த்த நிக்சன் நீ வேட்டி கட்டி இருப்பது சரியில்லை என சரி செய்யும் பொழுது முழங்கால் தெரியும் அளவுக்கு தொக்கி உள்ளே கை வைத்து சரி செய்கிறார். தற்பொழுது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ பிரதீப்பினால் பெண்களுக்கு எதுவும் நடக்காது. நிக்சன் இப்ப செய்வது சரியா?’ அவரைத்தான் நியாயமாக வெளியேற்றி இருக்க வேண்டும் என கமெண்ட் பக்கத்தில் கமலஹாசனை கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top