ராஜா போயிட்டாரு.. இப்போ ராணியா..? அடுத்த படத்துக்கு தயாரான விஜய் சேதுபதி பட இயக்குனர்..!!

By Priya Ram on ஆகஸ்ட் 12, 2024

Spread the love

நித்திலன் சுவாமிநாதன் குரங்கு பொம்மை படத்தை இயக்கி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்m கடைசியாக விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தை நெதரன் சுவாமிநாதன் தான் இயக்கினார். இந்த படத்தை சுதன் சுந்தரமும், ஜெகதீஷ் பழனிசாமியும் இணைந்து தயாரித்தனர்.

   

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீசான மகாராஜா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ், நட்டி, சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து மகாராஜா படம் இயக்கப்பட்டது. கதையை நித்திலன் சுவாமிநாதன் விறுவிறுப்பாக இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

   

 

அந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இப்போது ஓடிடி-யிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டினர். இந்த நிலையில் நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது. அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து கதையை இயக்க உள்ளார்.

அதன்படி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து நித்திலன் சுவாமிநாதன் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த படத்தை எடுப்பது குறித்து தான் மிதிலன் சுவாமிநாதன் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். நித்திலான் சுவாமிநாதன் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் அந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் அந்த படத்திற்கு மகாராணி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title