“லஞ்சமும் இல்ல.. ஊழலும் இல்ல..” 3 வார மந்திரி பதவியில் 1 ரூபாய் கூட உள்ள வரல.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி ஓப்பன் டாக்..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

தமிழக மின்சாரத் துறை அமைச்சரானசி.டி.ஆர். நிர்மல் குமார், தான் பதவியேற்று 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை லஞ்சமாக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும், மின்சாரத் துறைக்குள் ஒரு ரூபாய் கூட தவறான வழியில் உள்ளே வரவில்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, தங்களின் கடமைகளை முழுமையான நேர்மையுடன் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரத் துறையில் நிலவி வரும் சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி அளவிலான கடன் சுமை மற்றும் அண்மைக்காலமாக ஆங்காங்கே ஏற்படும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினைகளைச் சரிசெய்ய, புதிய அரசு பல்வேறு நீண்டகாலத் திட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கியுள்ளார். மேலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தங்கு தடையின்றி மின் விநியோகம் வழங்குவதே தங்களின் தற்போதைய முதன்மை இலக்கு என்றும், மின்சாரத் துறையில் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யத் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.