#image_title
நீலகிரி தமிழ்நாட்டில் மிகவும் விரும்பும் சுற்றுலா தலங்களில் ஒன்று. மலைகள் ராணி என்று அழைக்கப்படுபவது ஊட்டி. இங்கிருக்கும் மலை தொடர்களில் ஒன்று தான் நீலகிரி. இங்கு ஊட்டி கோத்தகிரி குன்னூர் போன்ற பார்ப்பதற்கு சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் இருக்கின்றன. இங்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது மேட்டுப்பாளையம் டாய் டிரெயின் ஆகும்.
வருடத்தில் எப்போதும் குளுமையை கொண்டிருப்பது ஊட்டி. பொட்டானிக்கல் கார்டன் ரோஸ் கார்டன் என இயற்கை அழகு கொஞ்சம் இடமாக ஊட்டி இருக்கிறது. மலை மீது ஏறி செல்லும் பயணமே மிகவும் அழகாக இருக்கும். அப்படி இந்த நீலகிரி மலை ஊட்டியில் தற்போது ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.
12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ தான் குறிஞ்சிப் பூ. மினியேச்சர் குறிஞ்சி நீல குறிஞ்சி என பல்வேறு வகையான குறிஞ்சி மலர்கள் இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் இதை நினைத்தவுடன் பார்க்கக் முடியாது. இந்த குறிஞ்சி வகைகளில் ஒன்றான புதர் குறிஞ்சி ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் பூக்கும் தன்மையைக் கொண்டது. இது நீலகிரியில் வளர்கிறது. இந்த ஒட்டுமொத்தமாக பூக்கும் குறிஞ்சி பூக்கும் போது நீலகிரி மலையே நீல நிறமாக காட்சியளிக்கும். அதனாலேயே இதுக்கு நீலகிரி என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.
நீலகிரியின் அடையாளமாக விளங்கும் இந்த குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மற்றும் ஊட்டி மலையில் பூத்துக் குலுங்குகிறது. மலையின் மேலே நீல நிற கம்பளியை விரித்தார் போல் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக நீல நிற மலையாக தற்போது காட்சியளிக்கிறது. இதை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில், 6 வயது சிறுமி தனது ஆடைகளை அழுக்காக்கியதற்காக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…