nilgris

நிறம் மாறிய நீலகிரி ஊட்டி மலை… அதிசயத்திலும் அதிசயம் நடந்ததன் காரணம் என்ன…?

By admin on ஐப்பசி 21, 2024

Spread the love

நீலகிரி தமிழ்நாட்டில் மிகவும் விரும்பும் சுற்றுலா தங்களில் ஒன்று. மலைகள் ராணி என்று அழைக்கப்படுபவது ஊட்டி. இங்கிருக்கும் மலை தொடர்களில் ஒன்று தான் நீலகிரி. இங்கு ஊட்டி கோத்தகிரி குன்னூர் போன்ற பார்ப்பதற்கு சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் இருக்கின்றன. இங்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது மேட்டுப்பாளையம் டாய் டிரெயின் ஆகும்.

   

வருடத்தில் எப்போதும் குளுமையை கொண்டிருப்பது ஊட்டி. பொட்டானிக்கல் கார்டன் ரோஸ் கார்டன் என இயற்கை அழகு கொஞ்சம் இடமாக ஊட்டி இருக்கிறது. மலை மீது ஏறி செல்லும் பயணமே மிகவும் அழகாக இருக்கும். அப்படி இந்த நீலகிரி மலை ஊட்டியில் தற்போது ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

   

12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ தான் குறிஞ்சிப் பூ. மினியேச்சர் குறிஞ்சி நீல குறிஞ்சி என பல்வேறு வகையான குறிஞ்சி மலர்கள் இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் இதை நினைத்தவுடன் பார்க்கக் முடியாது. இந்த குறிஞ்சி வகைகளில் ஒன்றான புதர் குறிஞ்சி ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் பூக்கும் தன்மையைக் கொண்டது. இது நீலகிரியில் வளர்கிறது. இந்த ஒட்டுமொத்தமாக பூக்கும் குறிஞ்சி பூக்கும் போது நீலகிரி மலையே நீல நிறமாக காட்சியளிக்கும். அதனாலேயே இதுக்கு நீலகிரி என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

 

நீலகிரியின் அடையாளமாக விளங்கும் இந்த குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மற்றும் ஊட்டி மலையில் பூத்துக் குலுங்குகிறது. மலையின் மேலே நீல நிற கம்பளியை விரித்தார் போல் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக நீல நிற மலையாக தற்போது காட்சியளிக்கிறது. இதை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.