கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விதார்த், அமலாபால், தம்பி ராமையா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனா. தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58 வது தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் தன்னுடைய அற்புதமான நடிப்பை நடிகர் விதார்த் வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறலாம். 2001 முதல் சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் கதாநாயகனாக மைனா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும் இவர் மௌனம் பேசியதே, சண்டக்கோழி, கொக்கி, திருப்பதி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் இவர் காயத்ரி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஏழு வயதில் ஒரு அழகான மகள் உள்ளார்.
இந்நிலையில் விதார்த் தன் மனைவியுடன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், உங்க கணவர் சினிமாவில் பல நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கிறாரே ஒரு டைம் கூட உங்களுக்கு கோபம் வரலையா என்று விதார்த் மனைவி காயத்ரி தேவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நிறைய பேரு என்கிட்ட இந்த கேள்வியை கேட்டு இருக்காங்க. சினிமாவுல ஒரு நடிகையை தொட்டு நடிக்கும் போது நெருக்கமா பேசும்போது உனக்கு கோபம் வந்ததில்லையான்னு கேப்பாங்க.
ஆனா இதுல கோபப்பட என்ன இருக்கு. தினமும் அவருடைய வேலை இதுதான். நம்ம தெரிஞ்சு தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் போய் டெய்லியும் நொய், நொய்யின்னு நீ ஏன் இப்படி பண்ற ஏன் அந்த இடத்தில் அப்படி பேசினா எதுக்கு தொட்ட அப்படின்னு எல்லாம் அவர்கிட்ட போய் கேட்க முடியாது. அவர் வேலை இதுதான் நமக்கு தெரிஞ்சிருச்சு அப்புறம் இதுல நாம கோபப்படுவதற்கு என்ன இருக்கு. அது அவரோட தொழிலா தான் நம்ம பார்க்கணும் என்று காயத்ரி வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…