‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே அண்ணாமலை கடைப்பிடித்து வந்தார். எனினும், அந்த நிலையிலிருந்து தற்போது தனது அரசியல் களத்தை தீவிரப்படுத்தியுள்ள அவர், அடுத்த கட்டமாக உள்ளாட்சித் தேர்தலே தனது பிரதான இலக்கு என அறிவித்து தேர்தல் அரசியலை நோக்கி முழுவீச்சில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
அதேவேளையில், முன்பு தவெக அரசுக்கு 6 மாதம் அவகாசம் வழங்கியிருந்த அவர், தற்போது அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார். இந்த அதிரடி அரசியல் மாற்றத்தின் தொடர்ச்சியாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
