FLASH NEWS: உருவானது அர்னாப் புயல்…. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…..!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கணிப்பின்படி, ‘அர்னாப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், படிப்படியாக மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து மிக தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் வரும் 28-ம் தேதி பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்தப் புயல் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.