“உனக்கு மாலையிட்டு, வருஷங்கள் போனா என்ன”.. பிரேம்ஜி வீட்டில் அடுத்த விசேஷம்.. வைரலாகும் வீடியோ..!!

By admin on ஆவணி 8, 2024

Spread the love

பிரேம்ஜி அமரன் கடந்த 1979-ஆம் ஆண்டு மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்தார். இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. வெளிநாடுகளுக்கும் சென்று பிரேம்ஜி இசை பயின்றுள்ளார். பல படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வேலை பார்த்துள்ளார்.

   

இந்நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே, சென்னை 28 படத்தில் ஜல்சா, கோவா படத்தில் கோவா தீம் பாடல், மங்காத்தா திரைப்படத்தில் விளையாடு மங்காத்தா ஆகிய பல பாடல்களை பிரேம்ஜி ரீமிக்ஸ் செய்து சூப்பர் ஹிட் ஆக்கினார். கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஞாபகம் வருதே திரைப்படத்திற்கு பிரேம்ஜி தான் இசை அமைத்துள்ளார்.

   

 

கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான மன்மத லீலை திரைப்படத்திற்கு அவர்தான் இசையமைத்துள்ளார். இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ரிலீஸ் ஆன சத்திய சோதனை திரைப்படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ளார். இப்போது பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. இந்த நிலையில் பிரேம்ஜிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

முரட்டு சிங்கிளாக இருந்து திருமணம் செய்து கொண்ட பிரேம்ஜிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோவை பிரேம்ஜியின் மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Indhu PM (@indhu.premgi)